கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் வீதியில் பயணப்பொதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுடைய சடலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான கார்த்திகா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை பார்வையிட்ட குறித்த பெண்ணின் கணவர், சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.குறித்த பெண் கோட்டேயில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிரந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் கோட்டேயில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment