August 1, 2015

சிறிலங்காவின் யுத்தக்குற்ற அறிக்கை 21ம் திகதி மைத்திரியிடம்!

சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்து அறிக்கை அடுத்த மாதம் 21ம் திகதி சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்படவுள்ளது.

அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிகைள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக்குழு, சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்த விசாரணைகளை நடத்தியுள்ளது.
இந்த அறிக்கை கடந்த மார்ச் மாதம் முன்வைக்கப்படவிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
எனினும் இது காலம் தாழ்த்தப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment