(11.07.2015) மதியம்அண்மையில் மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட வளாலாய் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை சேகரிக்க வந்த இரு வியாபரிகள் வெடிபொருட்களை ஐந்து பெரிய பைகளில் சேகரித்து
வைத்திருந்தனர். இன்று(12) அவற்றை கண்டுபிடித்துள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர். பழைய இரும்பு சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவரும் வெடிக்க கூடிய நிலையில் இருந்த வெடிபொருட்களை சேகரித்து வைத்துள்ளனர்.நேற்று(11) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில்கண்டி நாவலப்பிட்டி பகுதியினை சேர்ந்த எம்.எஸ்.நிஷாந்த (வயது19), மற்றும் ஓட்டுமடம் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த சந்தானம் பெஞ்சிமன் (வயது 32) ஆகிய இருவருமே மோட்டார் வெடிகுண்டு வெடித்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பலாலி பொலிஸார், வெடிப்புச் சம்பவ இடத்தில் இன்று(12) காலை விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது ஐந்து பெரிய பைகளில் வெடிக்ககூடிய நிலையில் இருந்த ஷெல், எறிகணைகள், குண்டுகள் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது அப் பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன்,மேலும் குறித்த வெடிகுண்டுகளினை செயழிப்பதற்குரிய நடவடிக்கையினை 51 ஆவது படைபிரிவின் குண்டு செயழிலக்கும் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment