11.7.2015 சனிக்கிழமை யேர்மனியின் வடமாநிலங்களில் உள்ள தமிழாலயங்களின் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி மிகச் சிறப்பாக தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனி ஒஸ்நாபுறுக் நகரில்
நடைபெற்றது.யேர்மனியக் கொடியேற்றப்பட்டு பின் தமிழீழக் கொடியேற்றப்பட்டது. அத்தோடு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டது.இத் தமிழாலயங்களின் மாணவ மாணவிகளால் மிகச் சிறப்பாக அணிநடை நிகழ்வுகள் நடைபெற்றது அணிநடையாக வந்த மாணவர்கள் கொடிமரியாதை செய்த காட்சி உணர்வுபூர்வமாக இருந்தது. அத்தோடு விளையாட்டுக்கள் முடிவடையும் நேரத்தில் ஒப்பனையும் பாவனையும் நிகழ்வு நடத்தப்பட்டது.வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. முறையே முதலாமிடத்தை ஒஸ்னாபுறுக் தமிழாலயமும் இரண்டாமிடத்தை கனேவர் தமிழாலயமும் மூன்றாமிடத்தை கம்பெர்க் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன. இத் தமிழாலயங்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள்கொடுத்து மதிப்பளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment