ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு விமானப்படையின் உலங்குவானூர்திகளை பெற்று தருமாறு முன்னணியின் தேர்தல் பிரச்சார குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை
விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் நேற்று கூடி கலந்துரையாடிய பின்னர், ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் கட்சியினர் பயணம் செய்ய இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை வழங்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
அரசாங்கத்தின் அதிகாரம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருப்பதால், இந்த வசதிகளை பெற ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை தவிர மகிந்த ராஜபக்சவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சுமார் 250 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறும், கொழும்பு மற்றும் குருணாகலில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு வீடுகளை வழங்குமாறும், ஏனைய பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் தங்கும் வசதிகளும் தேவை எனவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment