யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் சுமந்திரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனினும் கடந்த நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.விநாயகமூர்த்தி, உடல்நிலை காரணமாக இம்முறை போட்டியிடமாட்டாதெனவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தெந்தக் கட்சிகள், எந்தெந்த அடிப்படையில் போட்டியிடவுள்ளன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
மட்டக்களப்பு, திகாமடுல்லவுக்கான இடங்கள் இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். அது குறித்து நாங்கள் அடுத்த சில நாட்களில் முடிவினைப்பெறலாமென அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment