எமதுமக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் ஒரே இலட்சியத்துக்காக ஒன்று சேர்ந்து முன்னோக்கி போவதே எமதுநோக்கம் எனத் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பிரதமவேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகஅவர்மேலும்தெரிவிக்கையில் தமிழருடைய இனப்பிரச்சினைக்குநிரந்தரத் தீர்வொன்றினை பெறுவதற்கானவழியாகஅனைத்துதமிழ்க் கட்சிகளும் போராளிகளும் இணைந்துதமது கோட்பாடுகளை உலகிற்குவெளிப்படுத்தி இன்றுடன் 30 வருடங்கள் ஆகின்றன.அந்தகோட்பாடுகளுக்கு அமைவாக நேர்மையானமக்கள் 30 வருடங்களாக மாறிமாறி கட்சிகளுக்குவாக்களித்தனர்.
அக்கோட்பாட்டிற்குநேர்மையாகவும் உறுதியாகவும் இதுவரைகாலமும் செயற்பட்டுவந்தது தமிழ்த் தேசியமக்கள் முன்னணிமட்டும்தான். அந்தவகையில்
இத்தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டிஎன்றுமட்டும்பார்க்காமல் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய களமாக இதை பயன் படுத்துவோம் எனஅவர் தெரிவித்தார்.
தமிழ்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ்காங்கிரசின் சின்னமான ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடுவதற்காகவேட்புமனு தாக்கல் செய்ய நேற்று (13)யாழ்செயலகம் சென்றபோதே ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியமக்கள் முன்னணிசார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் செல்வராசாகஜேந்திரன்,பத்மினிசிதம்பரநாதன் உட்பட 10 பேர் நேற்றுவேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment