July 6, 2015

அனந்தி மாற்று தரப்பிற்கு ஆதவாக பிரச்சாரம்!

வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளபோதும் கட்சி தலைமை அதனை நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் மாற்று தரப்பிற்கு பகிரங்க ஆதரவினை வழங்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும், இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தன்னை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதனை கருதுவதாக அனந்தி சசிதரன் கூறியிருந்தார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார். எனினும், அது தொடர்பில் இன்னும் தனக்கு முடிவு எதனையும் சம்பந்தன் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படமாட்டாது என்று தமிழரசுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு தனது ஆதரவாளரகள் கோரி வருவதாகவும், தமிழரசுக் கட்சியில் இல்லாவிட்டாலும், வேறு கட்சியின் ஊடாகவாவது தேர்தலில் போட்டியிடுமாறு அவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து தான் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

எனினும் இறுதியாக நடந்த சமரசப்பேச்சுக்களினையடுத்து மாற்று தரப்பிற்கு இறுதி நாட்களினில் ஆதரவு கோரி அனந்தி களமிறங்குவாரென தெரியவருகின்றது.

No comments:

Post a Comment