July 22, 2015

தரவாளரைத் தாக்கிய மகிந்த � காணொளி தீயாகப் பரவியதால் கலக்கம்!

அக்குரஸ்ஸவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரையில், ஆதரவாளர் ஒருவரை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆவேசமாகத் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது.

கூட்டம் நடந்த மேடையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச திடீரென ஆதரவாளர் ஒருவரை நோக்கி எரிச்சலுடன் ஆவேசமாகப் பாய்ந்தார்.

உடனடியாக மகிந்த ராஜபக்சவின் மெய்க்காவலர்கள், அவரை இழுத்து மேடையை நோக்கி அழைத்துச் சென்றனர்.

மகிந்த ராஜபக்சவின் கையைப் பிடிக்க ஆதரவாளர் ஒருவர் முற்பட்ட போதே அவர் பதிலுக்குத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் தீயாகப் பரவியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படும் நிலையில், அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சில சக்திகள் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்கு தடையை ஏற்படுத்தும் வகையில், மது அருந்தியவர்களை கூட்டங்களுக்கு அனுப்பி வருகின்றன.

மதுபோதையில் இருந்த குறிப்பிட்ட ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவின் கைகளைப் பிடிக்க முயன்றார்.

இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்ட அவரின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவே, மகிந்த ராஜபக்ச அவ்வாறு நடந்து கொண்டார்.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு பாதுகாப்பு படையினர் வழங்கப்பட்டிருந்தாலும், கைத்தொலைபேசி, வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment