வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மனநோயாளியான பெண்மணியொருவர் தனக்குத் தானே தீமூட்டிஇன்று மாலை தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் குப்பிளான் சந்திக்கு அண்மையில்
இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
வசாவிளானைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த பெண்மணி கடந்த பல வருடங்களாக குப்பிளானில் உள்ள தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டிலுள்ள அனைவரும் இன்றைய தினம் வரணியில் உள்ள தமது உறவினர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்வொன்றுக்குச் சென்றுள்ளனர். இதன்போது குறித்த வயதான பெண்மணி மாத்திரம் வீட்டில் தனித்திருந்துள்ளார்.
பிறந்த நாள் நிகழ்வை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது குறித்த பெண்மணியைக் காணாது தேடிய போது அவர் வீட்டின் பின்புறமாக எரியுண்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
குறித்த பெண்மணி வீட்டின் பின்புறமாகக் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்குப் பெற்றோல் கொண்டு தீ மூட்டிய பின் தனக்குத் தானே தீ மூட்டியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அத்துடன் தனது புடவைகள் சிலவற்றையும் தீயிட்டுள்ளார். சடலத்தில் பலத்த தீக் காயங்கள் காணப்படுகிறது. சம்பவ இடத்திற்கு இன்றிரவு வந்த சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன் மல்லாகம் நீதவானும் இன்றிரவு 8.30 மணிக்குச் சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.
சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த இராஜலட்சுமி கணேசலிங்கம் (வயது-60) என்பரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார். குறித்த பெண்மணி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மன நோய்க்காகச் சிகிச்சை பெற்று வருபவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment