July 17, 2015

மகிந்தவை ஆதரிக்கப் போவதில்லை என்ற உரையை ஒளிபரப்ப தடை!

மகிந்தவை ஆதரிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பை ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையளர் மகிந்தராஜபக்ஷ இது தொடர்பில் ஊடக நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் தாம் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் செயற்படப் போவதில்லை என்றும், மகிந்தவை பிரதமராக நியமிக்கப் போதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு ஒன்றைவெளியிட்டிருந்தார்.
இது வேட்பாளர்களை தாக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்து பல்வேறு முறைபாடுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகறது.
இந்த நிலையில் இந்த உரையை ஊடகங்களில் ஒளிபரப்புவதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment