July 18, 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்!(வீடியோ இணைப்பு)

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மன்னார் மாவட்ட இளம் வேட்பாளரான பெற்றிக்ஸ் ஜெனன் என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று புலனாய்வுத் துறையினர் என தம்மை அடையாளப்படுத்தியோர் அவரது குடும்ப விபரம், தொழில், வெளிநாடுகளில் உள்ளோருடன் தொடர்பு இருக்கிறதா?, உறவினர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்களா என பல வினாக்களை கேட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment