July 18, 2015

வவுனியா விபத்தில் பெண் பலி! 7 பேர் காயம்!

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 

வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கி சென்ற ஓட்டோ மீது மன்னார் வீதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹைஏஸ் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் ஓட்டோவில் பயணித்த பெண் ஒருவர் பலியானார், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் வவுனியா, குடியிருப்பைச் சேர்ந்த இ.ஜானகி (வயது 52) என்பவரே உயிரிழந்தார். காயமடைந்த 7 பேரும் வவுனியா வைத்திசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

No comments:

Post a Comment