July 14, 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவை தெரிவிப்போம் – யேர்மனியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு!

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யேர்மனியில் மக்கள் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றது . அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை Frankfurt  நகரில்
மாற்றத்துக்கான குரல் எனும் கருத்துக்கமைய மக்கள் சந்திப்பு நடைபெற்றது . இச் சந்திப்பில் தாயகத்தில் நிலவும் சமகால அரசியல் சார்ந்த நிலைமைகளை எடுத்துரைத்து தமிழ்த் தேசியத்தை உயிர்வாழ வைப்பதுக்கும் , தமிழ் மக்களின் விடியலை நோக்கி நேர்மையாக பயணிக்கவும்  அவசியமான அரசியல் தலைமை மாற்றத்துக்கான தேவை பற்றி  கலந்துகொண்ட மக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது . இச் சந்திப்பில் பேச்சாளாராக கலந்துகொண்ட திரு பாஸ்கரமூர்த்தி அவர்கள் இத் தேர்தலில் தமிழ் மக்கள் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏன் தமது தார்மீக ஆதரவை  கொடுக்க வேண்டும் என விளக்கினார் .
அத்தோடு இச் சந்திப்பில் இணையவழி ஊடாக  தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக திரு ராஜகோன் கரிகரன்  அவர்களும் , பிரித்தாணியாவில் இருந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சசி  மற்றும் சுவிஸ் நாட்டில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஒருங்கிணைப்பாளரும் கலந்துகொண்டு தாயகத்தில் தமிழ்த் தேசியத்துக்கான குரலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான வெற்றி நிலை நிறுத்த வேண்டிய அவசியத்தையும் இதில் புலம்பெயர் மக்கள் செய்யவேண்டிய கடமையையும் எடுத்துரைத்தனர் .
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் இவர்களின் வெற்றிக்காக புலம்பெயர் தமிழ்மக்களே நாம் ஒன்றுபட்டுச்செயலாற்றுவோம். தமிழீழத்திலுள்ள நமது உறவுகள்,நண்பர்கள்  ஆகியோரிடம் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்களிக்குமாறு எடுத்துரைப்போம் . .இவர்களின் வெற்றி தமிழர்களின் தாயகம்,தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழன் தன்னைத்தானே ஆளுகின்ற சுதந்திர ஆட்சிக்கான வெற்றியாகும்.
frankfurtfrankfurt1

No comments:

Post a Comment