July 15, 2015

ஊடக சுதந்திரம் மீண்டும் அச்சுறுத்தல்!

பத்திரிகை சபையை மீண்டும் உயிர்ப்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள தீர்மானம் காரணமாக இலங்கையில் மீண்டும் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.எல்லையற்ற ஊடகவியலாளர்களின் இயக்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதனூடாக அதிகாரிகள் தமது விருப்புக்கு ஏற்றவகையில் ஊடகங்களை கையாளக் கூடிய நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை சபைக்கு பதிலாக ஊடகங்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சுயாதீன சபையொன்றை ஸ்தாபிக்குமாறு எல்லையற்ற ஊடகவியலாளர்கள் கோரியுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பத்திரிகை சபை முறைகேடான வகையில் பல தலையீடுகளை சந்தித்த நிலைமைகளும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஊடகங்களுக்கு பலவித வரையறைகளை விதிப்பதுடன், ஊடகவியலாளர்க்கு சிறைத்தண்டனையை வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லையற்ற ஊடகவியலாளர்களின் இயக்கத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதானி பென்ஷமின் ஸ்மைல் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பத்திரிகை சபையின் பொறிமுறையை மீண்டும் செயற்படுத்துவன் ஊடாக இலங்கையின் ஊடகத்துறை, அரசியல் அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளை இழக்கும் என எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment