நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு த்தாக்கல் செய்யும் இறுதித் திகதி நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வருகிறது.இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துவிட்டன. அரச பேருந்துகள், தரிப்பிடங்கள், பொது இடங்களில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தேர்தலி பிரசார நடவடிக்கையின்போது பொது இடங்கள் பெருந்தெருக்களைப் பயன்படுத்தவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அறவித்தலை மீறி செயற்படும் கட்சிகள், நபர்கள் மீது அந்தந்தத் துறையினர் சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment