July 20, 2015

யாழ் நகரப் பகுதியில் கடைக்குள் புகுந்து சன்னதமாடியது பயணிகளை ஏற்றிய மினி பஸ் !(படங்கள் இணைப்பு)

யாழில் உள்ள கணணி விற்பனை நிலையமொன்றிற்குள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான் புகுந்ததில் கடையின் கண்ணாடிகள் சிதறி விழுந்தன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வீதி வழியாக மிட்டாசுக் கடைச் சந்தியில் திரும்பி ஸ்ரான்லி வீதியூடாகப் பயணிக்க முயன்ற தனியார் வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி எதிரே வந்த ஹஜேஸ் வானுடன் மோதி அருகில் உள்ள கணணி விற்பனை நிலையமான PC Park இற்குள் புகுந்துள்ளது.
இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கி சேதமடைந்துள்ளது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிய வருகின்றது. சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு பார்வையிட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்துப் பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment