July 31, 2015

சுமந்திரனுக்கு ஆதரவு கொடுக்காதவர்களுக்கு அடுத்து வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் இடமில்லை – மாவையின் எச்சரிக்கை!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாவை சேனாதிராஜா கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமந்திரனுக்கு ஆதரவு கொடுக்காதவர்களுக்கு அடுத்து வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் மாவை சேனாதிராஜா எச்சரிக்கை செய்துள்ளார்.உள்ளுராட்சி சபைகள் இன்றுடன் கலைக்கப்படுகின்றன. இந்நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலினைத் தொடர்ந்து உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிப்புகளும் வெளியிடப்படவுள்ளன.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகள், நகர சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை அழைத்துள்ள மாவை சேனாதிராஜா அவர்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளார்.குறிப்பாக தன்னுடன் சேர்த்து சுமந்திரனின் வெற்றிக்காகவும் உழைக்க வேண்டும். சுமந்திரன் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு பொது மக்களை அழைத்துவர வேண்டும், பிரச்சார கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவற்றில் இருந்து தவறுபவர்களுக்கு அடுத்ததாக நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் வழங்கப்படமாட்டாது என்றும் மாவை சேனாதிராஜா கடுமையாக தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment