சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக எயர் மார்ஷல் கோலித குணதிலக நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் விங் கொமாண்டர் கிகான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் தளபதியான எயர் மார்ஷல் கோலித குணதிலக, வரும் 16ம் நாள் தொடக்கம், கூட்டுப்படைத் தளபதியாக செயற்படுவார். அத்துடன் அவர், எயார் சீவ் மார்ஷலாகவும் பதவி உயர்த்தப்படவுள்ளார்.
தற்போதைய கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
இதனிடையே, சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

No comments:
Post a Comment