June 19, 2015

விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வீடு திரும்பியவர் மீண்டும் விபத்தில்!

விபத்­தொன்றில் சிக்கி படு­கா­ய­ம­டைந்து மன்னார் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்ற ஒருவர் குண­ம­டைந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருக்­கையில் மீண்டும் விபத்­துக்­குள்­ளாகி குறித்த வைத்­தி­ய­சா­லையில் திரும்­பவும் அனு­ம­
திக்­கப்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.
இச்­சம்­பவம் நேற்று வியா­ழக்­கி­ழமை புதுக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்­துக்கு அரு­கா­மையில் இடம்­பெற்­றுள்­ளது.
பேசா­லையை சேர்ந்த ஏ. சுரேன்­லோகு (வயது 24) என்­பவர் கடந்த திங்­கட்­கி­ழமை மோட்டார் சைக்­கிளில் விபத்­துக்­குள்­ளாகி மன்னார் வைத்­தி­ய­சா­லையில் தங்­கியி ருந்து சிகிச்சை பெற்று விட்டு நேற்று தனது சகோ­த­ர­னு­டனும் நண்­பர்­க­ளு­டனும் முச்­சக்­கர வண்­டியில் வீடு திரும்­பிய போதே இவ்­வி­பத்து இடம்­பெற்­றுள்­ளது. கட்­டுப்­பாட்டை இழந்த முச்­சக்­க­ர­வண்டி வீதியை விட்டு விலகி குடை­சாய்ந்­துள்­ளது. அதேபோல் அவ்­வண்­டியில் பய­ணித்த நான்கு பேரும் காயங்­க­ளுக்­குள்­ளாகி மன்னார் பொது வைத்­திய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

பேசா­லையை சேர்ந்த ஏ. தர்சன் லோகு (வயது 18), ஏ. சுரேன் லோகு (வயது 24), பி. நிரோன் (வயது 20), ஏ. நியூமன் (வயது 18) ஆகியோரே மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களாவர்.

No comments:

Post a Comment