கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் நடைபாதை வியாபாரிகளுக்கு மீண்டும் வியாபாரத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ஏ ஜே எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
எனினும் குறி;ப்பிட்ட சில பகுதிகளிலேயே இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரமழானை முன்னிட்டு தற்காலிக அடிப்படையில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் கொழும்பு நகரை அழகுப்படுத்தல் திட்டத்தின் கீழ் புறக்கோட்டையில் நடைபாதை வியாபாரம் தடைசெய்யப்பட்டது.
அந்த வியாபாரிகளுக்கு 5ம் குறுக்குத்தெருவில் அங்காடிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
எனினும் நுகர்வோர் அங்கு செல்லாமை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தமது அங்காடிகளை கைவிட்டுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு தற்காலிக தீர்வாகவே நடைபாதை வியாபாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இது அரசியல் நோக்க முடிவல்ல என்று மேயர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment