தேவையற்றவிதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாள்களோ அதற்கு
அதிகமாகவோ விளக்கமறியலில் வைக்கப்படுவர் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி வூட்லர் அறிவித்துள்ளார்.
தேவையற்றவிதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்க

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்
பொலிஸாருக்கும் இடையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று
நடைபெற்றது. அதன்போதே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு
அறிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எதிர்கால சமூகமாக
இருப்பவர்கள் இன்றைய மாணவர்கள். அவர்களது எதிர்காலம் சிறப்பதற்கு என்ன
சேவையை வேண்டுமானாலும் செய்வதற்கு பொலிஸாராகிய நாங்கள் தயாராக
இருக்கின்றோம். எனவே மாணவர்களாகிய நீங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து
கொள்ள வேண்டும்.
உங்களுடைய செயற்பாடுகள் மோசமான முறையில் இடம்பெற்றால் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் தயங்கமாட்டோம். பாடசாலை நேரத்தில் பாடசாலை சீருடையுடன் தேவையற்றமுறையில் வீதியில் திரிந்தால் அல்லது சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு 14 நாள்களோ அதற்கு அதிகமாகவோ தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அத்துடன் பாடசாலை வளாகத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் பாபுள், வெற்றிலை, சிகரட், பியர் போன்ற போதைப்பொருட்களை பாடசாலை மாணவர்கள் வைத்திருப்பின் அதற்கான நடவடிக்கையும் உடனடியாகவே எடுக்கப்படும். தெரியாதவர்களுடன் தொலைபேசியில் உரையாடுதல், அவர்கள் தரும் பொருட்களை பெறுதல் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
மேலும் விளையாட்டு நிகழ்வின்போது பியர் உள்ளிட்ட மது வகைகள் மற்றும் சிகரட் ஆகிய எவையும் நிகழ்விடத்திற்குள் கொண்டுவரக் கூடாது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment