June 19, 2015

யாழில் றிசாத் தடுத்து வைத்திருந்த நிதியென்கிறார் மாவை சேனாதிராசா!

அமைச்சர் றிசாத் தடுத்து வைத்திருந்த நிதியே பிரதமர் ரணிலுடன் நடத்தப்பட்ட பேச்சினையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளதாக புதிய விளக்கமளித்துள்ளார் தமிழரசுக்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா. இன்று ஊடகவியலாளர்களினை யாழில் சந்தித்த அவர் முதலமைச்சரது பதில் கடிதம் பற்றி பிரஸ்தாபித்தார்.
தன்னால் குறித்த வேலை முன்மொழிவுகள் முன்னதாக சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அப்போது அமைச்சராக இருந்த் றிசாத் பதியுதீன் அதனை தடுத்து வைத்திருந்ததாகவும் இந்நிதியே தற்போது பிரதமர் ரணிலுடன் நடத்தப்பட்ட பேச்சினையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பனை அபிவிருத்திச்சபையின் கட்டுப்பாடு அப்போது றிசாத் வசமேயிருந்தது.தொடர்புடைய அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட வேலை முன்மொழிவுகள் தடுக்கப்பட்டிருந்தது. தற்போது ஒதுக்கப்பட்ட நிதி விடுவிக்கப்பட்டு வடமாகாணசபையினால் செலவு செய்யப்படவுள்ளது. பிரச்சாரம் செய்யப்படுவது போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளிற்கு அது செல்லப்போவதில்லையெனவும் அவர் தெளிவுபடுத்தினார்;.

முன்னதாக கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன் தன்னாலும் திட்டமுன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதையும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதனையும் உறுதிப்படுத்தியிருந்த நிலையில் இப்போது மாவையும் தானும் தொடர்புபட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே பலமில்லியன் பெறுமதியான சொகுசு காரை பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்படும் சுமந்திரன் இதவரை வாய் திறந்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment