June 25, 2015

இராணுவம் தொடர்பாக நாட்டுக்குள் விசாரணை : மிருசுவில் கொலை வழக்கு உதாரணம் என்கிறார் இராணுவ பேச்சாளர்!

2000ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டமை தேசிய பொறிமுறைக்குள் இராணுவம் தொடர்பாகவும்
விசாரணை நடைபெறுகின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என இராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டில் டிசம்பர் 19ம் திகதி குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் இராணுவம் தொடர்பாக தேசிய பொறிமுறைக்குள் விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகின்றது. என்பதற்கு சிறந்த உதாரணமாகும். என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment