June 4, 2015

தென்மராட்சி உசன் பகுதியில் இரயிலில் மோதி இளைஞன் படுகாயம்!

தென்மராட்சி உசன் பகுதியில் ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று புதன்கிழமை 3 மணியளவில் இடம்பெற்றது.


உசன் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை சைக்கிளில் கடக்க முற்பட்ட இளைஞரை கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த ரயில் மோதித்தள்ளியது.

படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார்.

உசனைச் சேர்ந்த கணேசலிங்கம் யதுர்சன் (வயது 17) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்
-

No comments:

Post a Comment