“மனிதம் பேணுவோம், பண்பாடு காப்போம்” எனும் தொனிப்பொருளில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் நினைவுடனான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
சுமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து, ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார்கள்.
வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தினை தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் நடைபெறும் மனித நேயமற்ற செயற்பாடுகளை கண்டிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் இந்த மனிதம் எனும் தொனிப்பொருளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில், மத தலைவர்கள், வைத்தியர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், யுவதிகள், ஆண்கள் எனப் பலர் கலந்து கொண்டு, தீபமேற்றியதுடன், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினார்கள்.
சுமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து, ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தினை தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் நடைபெறும் மனித நேயமற்ற செயற்பாடுகளை கண்டிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் இந்த மனிதம் எனும் தொனிப்பொருளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில், மத தலைவர்கள், வைத்தியர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், யுவதிகள், ஆண்கள் எனப் பலர் கலந்து கொண்டு, தீபமேற்றியதுடன், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment