உள்ளுராட்சி மன்றத்தின் செயற்பாட்டை பொறுத்தவரையில் 2006 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியிலே உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக மக்களுக்கு பல்வேறுபட்ட பணிகளை ஆற்றி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேசசபையில் 180 நாட்களை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன், மு.இராஜேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் வை.கோபிகாந், திருக்கோயில் பிரதேசசபையின் தவிசாளர் புவிதரன் மற்றும் ஆலையடிவேம்பு, திருக்கோயில், காரைதீவு பிரதேசசபையின் செயலாளர்கள் உப தவிசாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில்…
உள்ளூராட்சி மன்றங்களை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உள்ளுராட்சி திணைக்களங்கள் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்வைத்து செயற்பட்டு வருகின்றது அதனொரு கட்டமே இன்று இந்த இடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நியமனம் வழங்கும் நிகழ்வுமாகும்.
உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்காலத்தில் வினைத்திறனுடைய மன்றங்களாக திகழ்வதற்கு இந்நியமனம் வழங்கும் நிகழ்வினை முதற்படியான நிகழ்வாகவே பார்க்கவேண்டியிருக்கின்றது.
கடந்த காலங்களை பொறுத்தவரையில் உள்ளுராட்சி மன்றங்கள் ஒரு செயற்திறன் அற்ற நிலையினை காணக்கூடியதாக இருந்தது குறிப்பாக 2006க்கு பிற்பட்ட காலப்பகுதியிலே தான் உள்ளுராட்சி மன்றங்களின் செய்பாடுகள் மக்களுக்கான் தேவைகளை செய்யக்கூடியதொன்றாக மாற்றம் பெற்றது.
குறிப்பாக உள்ளுராட்சி மன்றத்தினை பொறுத்தவரையில் வீதி அபிவிருத்தி, சுகாதாரம், குடிநீர் போன்ற வேலைத்திட்டங்களை வினைத்திறனுடையதாக மாற்றி மக்களுக்கான சேவைகளை செய்து வருகின்றது.
எமது பகுதிகளில் உள்ள பழரதேசசபைகளை பொறுத்தவரையில் ஒவ்வொரு பிரதேசசபைகளுக்கும் ஒரு தொழிநுட்ப உத்தியோகத்தர் மாத்திரமே அனைத்து வெலைகளையும் செய்து வருகின்றார். அவ்வாரானவர்களை வைத்துக்கொண்டு பெறுமதியான பல வேலைத்திட்டங்களை மக்கள் நலன் சார்ந்து செயற்படுத்தி வருகின்றது.
இன்று கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் உள்ளுராட்சி மன்றங்கள் பல முன்னேற்றங்களை கண்டிருக்கின்றது. அதனடிப்படையில் இன்று புதிய நியமனங்களை பெற்றுக்கொள்ள வந்திருக்கும் அனைவரும் தங்களது பிரதேசம் சிப்பானதாக அமைவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற முன்வர வேண்டும்.
இன்று நீங்கள் 180 நட்களின் வேலைத்திட்டத்தின் கீழ் அனைவரும் புதிய நியமனங்களை பெற்றுக்கொள்கின்றீர்கள். ஆனால் சில பிரதேசசபைகளில் இந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை என்பது மனவேதனை தரும் விடயமாக பார்க்க வேண்டியிருக்கின்றது.
மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நியமனங்கள் கூட விகிதாசாத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை அவ்வாறு விகிதாசரத்தின் அடிப்படையில் வழங்கப்படுமாக இருந்தால் இனங்களுக்கிடையில் எந்த இனவிரிசலையும் ஏற்படத்தாமல் ஒற்றுமையாக செய்றபட வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.
ஆகவே இனிவரும் காலங்களிலாவது கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைபோன்று மத்திய அரசாங்கத்தில் இருப்பவர்களும் செயற்படுபவர்களாக இருந்தால் எதிர்காலம் சுபீட்சம் நிறைந்த காலமாக திகழும் எனவும் கூறினார்.











No comments:
Post a Comment