இன்று காலை மருதனார்மடம் பகுதியிலிருந்து சுன்னாகம் சந்தியினூடாக புன்னாலைக்கட்டுவன் நோக்கி சென்ற NPLI 7537 இலக்கமுடைய டிப்பர் வாகனத்தினால் சுன்னாகம் ஸ்ரேசன் வீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுபோதையில் இரண்டு காவாலிகள் டிப்பரனை தாறுமாறாக செலுத்தியுள்ளனர். இதனால் வீதியில் பயணித்தோர் கலக்கமடைந்தனர் பாடசாலை செல்லும் மாணவர்களையும் அச்சுறுத்தும் விதமாக செலுத்தியுள்ளனர்.
இதனைத்தட்டிக்கேட்க முற்பட்ட சிலரை வானத்தினை நிறுத்திவிட்டு இறங்கி ’புன்னாலைக் கட்டுவன் சந்திக்கு வா கவனிக்கிறம்’ எனக்கூறி மிரட்டியுள்ளனர். இதனை படம் பிடிக்க முற்பட்ட பிராந்திய செய்தியாளரையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
அத்துடன் நியாயம் கேட்டவர்களை தமது டிப்பரினால் பிற்பக்கமாக மோதுவதுபோல் டிப்பரை செலுத்தியும் பக்கத்தினால் வந்து வேலிகளுக்குள் வீழ்த்தியும் மிரட்டியுள்ளனர் .
யாரோ லீசிங்போட்டு வாகனங்களை எடுத்து சம்ம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தினால் அவர்கள் செய்யும் வேலையினை முதலாளிகளே சற்றுக் கண்காணியுங்கள். சுன்னாகம் பொலிசாருக்கும் நீதித்துறையினருக்கும் இது சமர்ப்பணம்.

No comments:
Post a Comment