முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள்
தூதருமான உதயங்க வீரதுங்க தொடர்ந்தும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக
தகவல் வெளியிட்டுள்ளார் இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஊடக பணிப்பளரும் ஊடகப்
பேச்சாளருமான மஹேசி கெலும்.
இன்று வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், இவர் ரசியாவின் முன்னாள் தூதுவராகக் கடமையாற்றியுள்ளார். புதிய அரசினால் இடை நிறுத்தப்பட்ட போதிலும் ராஜதந்திர கடவுச்சீட்டை மீள ஒப்படைக்காது அதைக்கொண்டுஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார். அத்துடன் இவர் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுத கொள் களனை உக்ரைனுக்கு கொண்டு செல்வதற்கு கடந்த வாரம் முயற்சித்துள்ளார். அதற்காக ஈரான நாட்டில் உள்ள ஒருவரை தெஹ்ரான தூதுவரலாயம் ஊடாக பவர் ஓப் அட்டேர்னி வழங்கி கொழும்பில் உள்ள ஆயுதக் கொள்கலனை உக்ரைன் அல்லது வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். அதனை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது எனவும் மேலும் தெரிவித்த அவர், தெஹ்ரானில் உள்ள தூதுவரலாயத்தில் தற்போது இவ்விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தனது இராஜதந்திர கடவுச்சீட்டை ஒப்படைக்க முடியாது என மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள் அவர் லண்டனில் போலி நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து தொடர்ந்தும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவதாகவும் இது தொடர்பில் இந்தியா – இலங்கைக்கான உக்ரைன் தூதுவரிடம் வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தை நடாத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment