June 24, 2015

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் தமிழ்ப் பட்டயக்கல்வி!

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் வளர்தமிழ் பாடநூல் திட்டத்துடனான மேல்நிலைக் கல்வியாக தமிழ்ப்பட்டயக்கல்வி தொடர்கிறது. இத் தமிழ்ப் பட்டயக்கல்வி பயிற்சி நெறிக்கு ஐக்கிய இராச்சியத்தில் 200 வரையான ஆர்வலர்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

இப் பட்டயக்கல்விக்கான நேரடி விரிவுரைகள் ஐக்கிய இராச்சியத்தில் 20-06-2015 சனிக்கிழமை, 21-06-2015 ஞாயிற்றுகிழமை ஆகிய நாட்களில் Harrow பகுதியில் நடைபெற்றது.  நூற்றுக்கணக்கான பட்டயக்கல்வி ஆர்வலர்கள் இரு நாள் விரிவுரைகளிலும் பங்கேற்றிருந்தனர். விரிவுரைகளை தழிழ் நாட்டில் இருந்து விசேடமாக வருகை தந்திருந்த விரிவுரையாளர் – பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள் மிகவும் சிறப்பாக நடாத்தி வருகின்றார்.
மேலும் விரிவுரைகள் february  மாதம் வரை பிரித்தானியாவின் பல இடங்களில் ஓழுங்கு படுத்தப்பட்டுள்ளது. இப் பட்டயக்கல்வி ஈராண்டு  கற்கைநெறியாகும். இதற்கான முதலாம் ஆண்டு  இறுதித் தேர்வு 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதப்பகுதியில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் ஆங்கிலக்கல்விக்கு சமாந்தரமான இவ்  வளர்தமிழ் பாடத்திட்டத்தினை ஸ்கொட்லாண்ட் உள்ளடங்கலாக ஏறத்தாள ஆறாயிரம் வரையான மாணவர்கள் 85 தமிழ்ப்பள்ளிகளில் மிகவும் ஆர்வத்துடன் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறாக பதின்நான்கு நாடுகளில் 40 000 மாணவர்கள் விரும்பிக் கற்கும் வளர்தமிழ்ப் பாடத்திட்டத்தின்  அனைத்துலகப் பொதுத்தேர்வு கேட்டல், பேசுதல்; வாசித்தல் எழுதுதல் போன்ற நான்கு பகுதியாகவும் நடைபெறுகிறது. வளர்தமிழ்ப் பாடத்திட்டத்தின்  அனைத்துலகப் பொதுத்தேர்வு 2015 இற்கு ஐக்கிய இராச்சியத்தில் 06.06.2015 அன்று 26 தேர்வு நிலையங்களில் நாலாயிரம் வரையான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

No comments:

Post a Comment