தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் முகமாகவும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்ச் சிறார்களை எமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை கொடுக்கும் வகையில் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால்
கடந்த பல ஆண்டுகளாக கலை மாருதம் நிகழ்வு நடைபெற்று வருகின்றது .
அந்தவகையில் இவ்வாண்டும் கலை மாருதம் 2015 சிறப்பாக நடைபெற்றது . இவ் ஆண்டு நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த தமிழின உணர்வாளரும் , நாம் தமிழ் கட்சியின் முக்கியஸ்த்தவரும் ஆகிய பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் , புலம்பெயர் தமிழ்ச் சிறார்களின் திறமைகளையும் இன உணர்வையும் பாராட்டியதோடு , தமிழின விடுதலையை நிச்சயம் நாம் வென்றெடுப்போம் எனும் உறுதியுடன் தனது கருத்தை தெரிவித்தார் .
பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த ஈழத்து நாடக கலைஞர் தயாநிதி தம்பையா அவர்கள் பேர்லின் வாழ் உறவுகளையும் இணைத்து நிகழ்வில் கலந்துகொண்ட மக்களை சிரிக்கும் சிந்திக்கவும் வைத்தார் . கலை மாருதம் நிகழ்வில் இவ்வாண்டு சிறப்பு நிகழ்வாக செல்வி சௌமியா அவர்களின் இசைக்கச்சேரி இடம்பெற்றது . தொடர்ந்து சிறுவர்களின் மற்றும் இளையோர்களின் பல நடனங்கள் பாராட்டுகளை பெறும்வகையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment