தியாகி சிவகுமாரன் நினைவாக மாணவர் எழுச்சி நாள் 2015 நியூ சீலந்து நாட்டில் தமிழ் இளையோர் அமைப்பினரால் மிக சிறப்பாக நடைபெற்றது . அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு தியாகி சிவகுமாரன் திருவுருவப் படத்துக்கு சுடர் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்தது .
மாணவர் எழுச்சி நாள் அரகங்கத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ் கலை கலாசாரத்தை , மொழி பண்பாட்டை , தமிழின அடையாளத்தை பேணும் வகையில் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .குறிப்பாக அனைத்து குழந்தைகளும் ஆர்வமாக தமிழர் பாரம்பரிய வரலாற்று ரீதியான பதிவுகளை முக்கியப்படுத்தி நிகழ்வுகளை காட்சிப்படுத்தியது இனி தமிழ் மெல்லச் சாகும் என்று சகுணிப்பவர்களுக்கு விழுந்த சவாலாக அமைந்தது. தமிழ் வாழும்.
No comments:
Post a Comment