June 29, 2015

யாழில் 4மணித்தியாலத்துக்கு ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் - வைத்தியர் சிவன்சுதன்!

யாழில் 4 மணித்தியாலங்களுக்கு ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக வைத்தியர் சிவன்சுதன் தெரிவித்துள்ளார்.


யாழ்.போதனா வைத்திய சாலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழில் தற்கொலைகள் அதிகரிக்கின்றது. யாழ்.போதனா வைத்திய சாலையில் 4 மணித்தியாலங்களுக்கு ஒருவர் தற்கொலை முயற்சியுடன் அனுமதிக்க படுகின்றார். அதற்கு போதை பொருள் பாவனை மறைமுகமாகவே நேரடியாகவோ செல்வாக்கு செலுத்துகின்றது.

அத்துடன் மது மற்றும் போதை பொருள் பாவனையால் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் வீதி விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்பட்ட காயங்கள் அவற்றின் பாவனையால் ஏற்பட்ட வேறு நோய்கள் என்பவற்றுக்கே அதிகமானவர்கள் சிகிச்சை பெறுகின்றார்கள். இதனால் வைத்தியசாலை மருந்து வகைகள் , வளங்கள் என்பனவும் வீண் விரயமாகின்றது.

இவை மட்டுமின்றி சமூக பொருளாதார கல்வியில் கூட அவை தாக்கம் செலுத்துகின்றன கலாச்சார அழிவுகளை கூட ஏற்படுத்துகின்றது.

இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கிலையே அதிகமாக போதை பொருள் மது பாவனை அதிகமாக உள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்பட்டு அவற்றை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தெரிவித்தார்

No comments:

Post a Comment