June 2, 2015

இந்திய மீனவர்கள் 14 பேர் மன்னாரில் கைது!

இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் நேற்றிரவு திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமினில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையினில் இன்று காலை 14 பேரும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர். அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

No comments:

Post a Comment