May 26, 2015

தகவல் பரிமாற்றம் - அகதிகள் விண்ணப்பங்கள் தொடர்பான புதிய பரிசீலனை அறிமுகம்!

புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய அரசு சென்ற டிசெம்பர் மாதத்தில் கொண்டுவந்திருந்தது. இதன் மூலம் தற்காலிக விசாக்களை அரசு மீண்டும்
அறிமுகப்படுத்தியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் துரிதமாக விசாரிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று  அரசு அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்களால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. அவர்களுக்காக  தமிழ் தகவல் மையம்  தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த மாற்றங்கள் குறித்து விளக்கம் தரவும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் என சிட்னியின் பிரபல சட்ட அமைப்பு ஒன்றிலிருந்து சட்டத்தரணி ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள், அவர்களது நலன் விரும்பிகள், மற்றும் இம்மாற்றங்கள் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்தத் தகவல் மாலையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாள்: 28  மே 2015 - (வியாழக் கிழமை)
நேரம்: 6:00 மணியிலிருந்து 8:00 மணி வரை
இடம்: பெண்டில் ஹில் தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள யாழ் மண்டபம்

மேலதிக தகவல்களுக்கு: 0421 83 2255 (சுஜன் செல்வன்)

No comments:

Post a Comment