May 14, 2015

காங்கேசன்துறை விடுதியில் சிக்கல் காதல்!

வல்.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினரால் நடத்தப்படும் தல்செவன விடுதியில் சமூகவிரோத செயல்கள் தாராளமாக நடப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சமூகவிரோத செயல்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இராணுவமும் செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நேற்றுகாலை நடந்த, மனிதஉரிமைகள் பாதுகாப்பாளர்களிற்கான பாதுகாப்பு வழிகாட்டி தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிவில் சமூகத்தினரால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
வலி.வடக்கிலுள்ள காங்கேசன்துறையில் தல்செவன என்ற இந்த விடுதி இராணுவத்தினரால் நடத்தப்படுகிறது.
குறைந்தவிலையில் இருந்து அதிக விலை வரை பலதரத்தில் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன.
இதனைப்பயன்படுத்தி பல ஜோடிகள் அங்கு சென்று உல்லாசம் அனுபவித்து வருவதாக குற்றம்சுமத்தப்படுகிறது.
அங்கு இராணுவத்தினரை தவிர வேறு யாருமில்லாதது, மற்றும் தட்டிக்கேட்பார் யாருமில்லை என்பதால் கள்ளக்காதல் ஜோடிகளின் சொர்க்கபுரியாக தல்செவன மாறி வருகிறது.


இதனை கூட்டத்தில் கலந்த கொண்டவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.hoteil

No comments:

Post a Comment