May 14, 2015

பருத்தித்துறையில் இன்று முள்ளிவாய்க்கால் தினம் சுடர் ஏற்றி அனுஸ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் 12 ஆம் திகயிலிருந்து 18 ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று பருத்தித்துறை வெளிச்சவீட்டிற்கு அருகில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுகிர்தன், சிவயோகன் மற்றும்,

வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் ச.சஜீவன், பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூ.சஞ்ஜீவன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நிகழ்வு நடைபெறும் பொழுது புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்தனர், நிகழ்வு முடிவின் பின் புலனாய்வாளர்களால் பங்குபற்றியவர்களிடம் விசாரணை செய்தனர்.

No comments:

Post a Comment