யாழ்ப்பாணத்தில்
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளும்
உள்ளடங்குகின்றனர்.
யாழ்ப்பாண நூலகத்தை பார்வையிடச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பிரஜைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களுக்கும் வன்முறைகளுக்கும் தொடர்பில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வார கால சுற்றுலா ஒற்றுக்காக கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
புங்குடுதீவு மாணவி கொலைக்கு எதிர்ப்பு
வெளியிட்டு நடத்தப்பட்ட போராட்டம் கலகமாக வெடித்து யாழ்ப்பாண நீதிமன்றம்
மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 130 பேரை பொலிஸார் கைது செய்து அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று இந்திய சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாண நூலகத்தை பார்வையிடச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பிரஜைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களுக்கும் வன்முறைகளுக்கும் தொடர்பில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வார கால சுற்றுலா ஒற்றுக்காக கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment