May 14, 2015

சட்டவிரோதமாக காணிகள் கைப்பற்றப்படுவதைக் கண்டித்து மட்டக்களப்பு மீறாவோடை மக்கள் ஆர்ப்பாட்டம்( படங்கள் இணைப்பு)



மேற்படி விடயங்களை தொடர்பாக செவிமடுத்த மக்கள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பொலிசார் வழங்கிய உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.


மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அயல் கிராமங்களில் உள்ள சில முஸ்லிம்கள் சட்டவிரோதமாக கைப்பற்றி வருவதை கண்டித்துஅப்பகுதி மக்கள் கவணயீப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று புதன்கிழமை இரண்டாவது தடவையாக காலை 8.30. மணியளவில் கோறளைப்பற்று பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மீறாவோடை மக்கள் கவணயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 62 தமிழ் குடும்பங்களுக்கு குடியிருப்புக் காணிக்குறிய காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அதில் தங்களை குடியேறி இருப்பதற்கு அயல் கிராமமான மீறாவோடை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த சில முஸ்லீம் மக்கள் தடையாக இருந்து வருவதாகவும் அதனால் தங்களது காணிகளை தங்களுக்கு மீட்டுத்தருமாரும் கோரியே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீறாவோடை தமிழ் பிரதேசத்தில் இருந்து பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களும் வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான பாதைவழியாக ஊர்வலமாக சென்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக பிரதேச செயலக முன் வாசல் கதவினை மூடி எவரும் உட் செல்ல விடாது தடுத்து தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

இந் நடவடிக்கையினால் பிரதேச செயலக நேற்றைய நடவடிக்கைகள் யாவும் சுமார் 3 மணி நேரம் இஸ்தம்பித நிலையினை அடைந்தது.
குறித்த ரூnடிளி;காணிப்பிரச்சினை தொடர்பாக நேற்று மீண்டும் மாவட்டச் செயலாளருக்கு உதவி பிரதேச செயலாளர் தெரியப்படுத்தியதுடன் மேலதிக நடவடிக்கையிலலும் ஈடுபட்டிருந்தார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக ஏற்கனவே கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சார்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வாழைச்சேனை பொலிசார் விளக்கம் அளித்தனர்.

இதன்போது பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக எதிர்வரும் 2015.06.22.ஆம் திகதி வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்றில் வழக்கு நடைபெறவுள்ளதாகவும் நீதி மன்ற தீர்ப்பின் படி மேலதிக நடவடிக்கைகளை தம்மால் தொடர்ந்து மேற்கொள்ள முடியும் எனவும் குறித்த காணி தொடர்பான பிணக்கில் சம்பந்தப்பட்டோர் அன்றைய தினம் தங்களது ஆவணங்களுடன் நீதி மன்றில் சமூகமளிக்கப்பட வேண்டும் என்று பொலிசார் கேட்டுக் கொண்டனர்.
நேற்றில் இருந்து அத்துமீறி காணிகளை சட்ட விரோதமான முறையில் குறித்த காணிக்குள் அத்து மீறி குடியேற வருபவர்களுக்கெதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்டோர்களை கைது செய்து நீதி மன்றில் ஆஜர்படுத்துவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.pro 7pro 1pro 5

No comments:

Post a Comment