விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளர்களுக்கும் அருண் தம்பிமுத்துவின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளர்களுக்கும் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரான அருண் தம்பிமுத்துவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் வைத்து நேற்றைய தினம் இரவு 10.30மணியளவில் இக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் போது மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகி ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறால் பண்ணை காணி விடயத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையே இக்கைகலப்புக்கு காரணம் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment