May 21, 2015

வித்தியாவுக்கு நீதி வேண்டி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மாணவியை வன்புணர்வின் படுகொலை செய்த குற்றவாளிகளை தண்டிக்குமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வித்தியாவுக்கு எற்பட்ட இந்த கொடூரமான நிலைய எனிமேல் எந்த
காலங்களிலும் இடம்பெறக்கூடாது. அதற்கு இலங்கையின் சட்டத்துறை வலுவாக இருக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சமாதானத்தை நோக்கி பயணிக்கும் இந்த வேளையில், மாணவிகளை இலக்கு வைக்கும் இவ்வாறான கொடுமையான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்ட மாணவிக்கான தீர்ப்பு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன்போது குற்றவாளிகளுக்கு எதிராக எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பானம் புங்குடுதீவு மாணவியான வித்தியாவின் படுகொலையினை கண்டித்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பல்கலைக்கழக வளாகத்தில் பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தார்கள்.
மிகவும் கொடூரமாக பாலியல் வல்லுரவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவுக்காக வேண்டி வடகிழக்கு மாகாணங்களில் சில நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேரணிகளும், அமைதி வழி போராட்டங்களையும் பல அமைப்புக்களும், பாடசலை மாணவர்களும் நடத்தி வருவதும் குறிப்படத்தக்கது.
அதனொரு கட்டமாகவே இன்று அம்பாறை மாவட்டதில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்கு கவ்வி கற்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் அனைவரும் ஒருமித்து வித்தியாவின் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை நடத்தியிருந்தார்கள்.
இவ்வார்ப்பாட்ட பேரணியானது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தில் இருந்து ஆரம்பித்து அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி வரைக்கும் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கைகளில் சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment