ஊடக சுதந்திரத்தில் இலங்கையின் நிலைமையில் முன்னேற்றமில்லை என தெரியவந்துள்ளது.எல்லைகளற்ற ஊடகவிலாளர்களினால் இந்த மதிப்பீடு
நடத்தப்படத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஊடக சுதந்திரம் தொடர்பிலான உலகத்
தரப்படுத்தல் ஒன்றில் இலங்கை 165ம் இடத்தை வகிக்கின்றது.
கடந்த ஆண்டும் இலங்கை 165ம் இடத்தையே வகித்து வந்தது.
மொத்தமாக 180 நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்படுகின்றது.
ஊடகங்களின் ஊடான நிலைப்பாடு, ஊடகங்களின் சுயாதீனத்தன்மை, அரசாங்கத் தணிக்கை, அரசாங்கச் சட்டங்கள், தகவல்களின் வெளிப்படைத்தன்மை, ஊடக அடக்குமுறை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வினாக்கொத்துக்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கான பதில்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதிகளவு ஊடக சுதந்திரம் கொண்ட நாடாக பின்லாந்து திகழ்கின்றது.
தெற்காசிய நாடுகளில் இலங்கையே ஊடக சுதந்திரத்தில் மிகவும் பின்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பூட்டான், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளை விடவும் இலங்கையின் ஊடக சுதந்திரம் மோசமாக காணப்படுவதாகவே எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் ஊடக சுதந்திர சுட்டியின் ஊடாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் ஊடக சுதந்திரம் அதிகம் பாதிக்கப்பட்ட இருபது நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment