தமிழரசுக்கட்சியின் செயலாளரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் தான் தர்ம சங்கடங்களை எதிர்கொள்வதாக மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார்.
வன்னியினில் கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினரொருவர் பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் அவர்களது தற்கொலைகள் தொடர்ந்தும் சர்ச்சைகளினை ஏற்படுத்திவருகின்றது.அதன் தொடர்ச்சியாக மாவை மற்றும் சம்பந்தனின் கொடும்பாவிகள் எரியூட்டப்பட்டுமிருந்தது.
இந்நிலையினில் குறித்த உள்ளுராட்சி மன்ற பிரதிநிதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கதான் பணித்திருந்த போதும் அதனை அமுல்படுத்த தமிழரசுக்கட்சியின் செயலாளர் தவறிவிட்டதாக மாவை கவலை வெளியிட்டுள்ளார்.இதன் விளைவாகவே தனது கொடும்பாவி எரிக்கப்பட காரணமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கூட்டமைப்பு பதிவு உள்ளிட்ட விடயங்களை மக்களிற்கு தெளிவுபடுத்த அவர் திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment