சிலாபம் பல்லம பிரதேசத்தில் பட்டாசு கைத்தொழிற்சாலையொன்றில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக பட்டாசு தொழிற்சாலை முற்று
முழுதாக
சேதமடைந்துள்ளது. இச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்லம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகவில என்னும் இடத்தில் இயங்கி வந்த பட்டாசு கைத்தொழிற்சாலையே இவ்வாறு பாரியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர் சுனில் சாந்த என்ற 40 வயதான நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டாசுகளை உற்பத்தி செய்து கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment