கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட
வலிகாமப் பிரதேச மக்கள் ‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தொனிப்
பொருளில் யாழ். நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை மாபெரும்
பேரணியொன்றை நடாத்தவுள்ளனர்.
தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம்
ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரையும் கலந்து
கொள்ளவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது.
முற்று முழுதான அரசியல் கலப்பற்ற பேரணியாக இது அமையும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போராட்டத்தின் முடிவில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர்களை கையளிக்கவுள்ளனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பிரிவினைகளின்றி அனைத்து மக்களும், மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தூய நீருக்கான மக்கள் ஒன்றியம் கேட்டுள்ளது.

No comments:
Post a Comment