மஹிந்த ராஜபக்சவின் மருமகனும் உக்ரைனுக்கான முன்னாள் இலங்கைத் தூதருமான உதயங்க வீரதுங்க தொடர்பு பட்டிருப்பதாகக் கூறப்படும் ஆயுத விநியோகக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடாத்தி மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலிஸ் உயரதிகாரிகள்
மற்றும் அரச திணைக்களங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உக்ரைன் பயணமாகவுள்ளது.
உக்ரைனில் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு அவர் மூலம் ஆயுத விநியோகம் இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவ்விசாரணை மேற்கொள்ளப்படவிருக்கும் அதேவேளை உதயங்க வீரதுங்க தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment