April 9, 2015

மஹிந்தவை போன்று மைத்திரிக்கும் தம்பிகளால் அழிவு!

சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மொபிட்டல் நிறுவன நிறைவேற்று பணிப்பாளராக செயற்படும் ரஞ்சித் ரூபசிங்க இன்னும் பதவியில் நீடித்திருப்பது ஜனாதிபதியின் சகோதரர் குமாரசிறி சிறிசேனவின் தயவில் என டெலிகொம் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெலிகொம் பிரதான நிறைவேற்று அதிகாரியான ரஞ்சித் ரூபசிங்க நியமிக்கப்பட்ட மஹிந்த ஆட்சி காலத்திலாகும்.

அப்போதைய டெலிகொம் தலைவர் நிமால் வெல்கம, பிரதான நிறைவேற்று அதிகாரி லலித் சில்வா மற்றும் ரூபசிங்க ஆகியோர் இணைந்து மஹிந்தவை தொடர்ந்து பதவியில் வைத்திருக்கவென நிறுவனத்தின் பணத்தை பணிப்பாளர் சபைக்கு அறிவிக்காமல் செலவிட்டமை பகிரங்க இரகசியமாகும். நிமல் வெல்கம மற்றும் லலித் சில்வா ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில் ரூபசிங்க இன்னும் பதவியில் உள்ளார்.

சேவை காலம் முடியும் வரை பதவியில் இருக்க ரூபசிங்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பணிப்பாளர் சபை கூட்டத்தில் 'முடிந்தால் என்னை பதவி விலக்கிக் காட்டுங்கள்' என்று ரஞ்சித் ரூபசிங்க சவால் விடுத்துள்ளார். குமாரசிறி சிறிசேன வழங்கியுள்ள இடத்தின் காரணமாகவே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவென ரூபசிங்கவை குமாரசிறி சிறிசேன அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. தலைவரின் இந்த செயற்பாடு குறித்து 'லங்கா நியூஸ் வெப்' இணையத்திடம் கருத்து வௌியிட்ட டெலிகொம் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர். 'மஹிந்த ராஜபக்ஷவை தனது தம்பிகள் அழித்தது போல் சிறிசேன ஜனாதிபதியை அழிக்க அவரது தம்பிகள் செயற்படுகின்றனர்' என்றார்

No comments:

Post a Comment