April 16, 2015

இலங்கை ஊடாக அதி நவீன ஆயுதங்களை நக்ஸல்கள் கடத்தி வருகின்றனர்!

நக்ஸல்கள் இலங்கையின் ஊடாக அதி நவீன ஆயுதங்களை கடத்தி வருவதாக வௌியான தகவல்களையடுத்து, இந்திய மத்திய உளவுத்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களே இவ்வாறு இந்திய நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் ஆயுதங்களை வழங்குவதாக தகவல் கிடைத்துள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நேபாளம் மற்றும் மியன்மார் ஊடாக நக்ஸல்கள் பெற்றுக் கொள்வது ஆதாரங்களுடன் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தற்போது மற்றுமொரு புதிய வழியின் ஊடாகவும் ஆயுதங்களை கடத்தப்படுவதாக வௌியான தகவல்கள் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கவலை வௌியிட்டுள்ளனர்.

நக்சலைட் போராளிகளுக்கு நிதியும் ஆயுதங்களும் கிடைத்து வருவது பாதுகாப்பு படையினருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என சிரேஷ்ட இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment