தென்னிலங்கை மற்றும் உள்ளுர் நடைபாதை வியாபாரம்
சம்பந்தமாக தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டுமென வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையினில் மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இது பற்றி யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த சந்திப்பில் நாம் முக்கியமாக நடைபாதை வியாபாரம் தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.அது தொடர்பில் மாநகர சபை ஆணையாளர் ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து நடைபாதை வியாபாரத்தை முற்றாக தடைசெய்வதாகவும் அவர்களுக்கு பிறிதொரு இடத்தை ஒதுக்கி வரர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிப்பதாகவும். உறுதியளித்தார்.
ஆனால் ஏமாற்றம் ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து இன்றுவரை எந்தவித நடைபாதை வர்ரத்தகமும் யாழ்.நகரத்திலிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை நடைபாதை வர்த்தகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அப்பாலே நிரந்தரமான வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு இடையூறாக இவர்கள் செயற்படுகிறார்கள்.ஆகையால் இவரக்ளை நகரில் உள்ள வர்த்தகர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பிறிதொரு இடத்தை ஒதுக்கும்படி கேட்டிருந்தோம்.ஆனால் ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து இன்று வரை நடைபாதை வர்த்தகம் நகரப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்படவில்லை.
வடமாகாணசபைக்கும் குறித்த பிரச்சினை தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் குறித்த பிரச்சினையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.ஆயினும் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடில் பூரண கடையடைப்பு செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் விரைவில் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
|
No comments:
Post a Comment