April 14, 2015

கஞ்சா விற்றவரை காட்டிக் கொடுத்தார் வாங்கியவர் - யாழில் சம்பவம்!

கஞ்சா வாங்கிச் சென்றவர் பொலிஸாரிடம் மாட்டியவுடன் தனக்கு விற்றவரைக் காட்டிக் கொடுத்தார். தற்போது இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. யாழ். பூம்புகாரில் வீட்டில் வைத்து கஞ்சா  விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. 

 
அங்கு சென்ற ஒருவர் ஒரு பைக்கட் கஞ்சாவை விலைக்கு வாங்கிச் சென்றபோது பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டார்.
 
பொலிஸ் விசாரணையில் அந்த நபர்தனக்குக் கஞ்சா விற்ற நபரைக் காட்டிக்கொடுத்தார். பூம்புகாரிலுள்ள வீட்டுக்குச் சென்று கஞ்சா விற்பனை செய்த நபரைக் கைது செய்ததோடு அவரிடமிருந்து 2 கஞ்சா பைக்கட்டுக் களையும் கைப்பற்றினர் பொலிஸார்.
 
அதையடுத்து இவருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலி ஸார் மேலும் தெரிவித்தனர்.
 
கடந்த சில நாள்களாக யாழ்.நகரில் கஞ்சா போதைப் பொருள்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வரு கின்றனர். யஹரேயின் போதைப் பொருள் வைத்திருந்தவர்க ளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தவிர சில நாள்களுக்கு முன்னர் சுமார் 87 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை யாழ்ப்பாணத்துக்குக் கடத்திவர முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment